தலச்சிறப்பு |
மார்க்கண்டேய முனிவர் இப்பகுதிக்கு வந்தபோது சிவபூஜை செய்வதற்கு பால் கிடைக்காமல் வருந்தியபோது, சிவபெருமான் அங்கு பால் பெருகும்படி செய்து அருள்புரிந்தார். சிவபூஜைக்கு பால் சுரந்த இடமாதலால் இத்தலம் 'திருப்பாற்றுறை' (பால் + துறை) என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'ஆதிமூலநாதர்', 'பாற்றுறைநாதர்' என்னும் திருநாமங்களுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'மேகலாம்பிகை', 'நித்திய கல்யாணி' என்னும் திருநாமங்களுடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்..
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|